2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச்சூடு: படைவீரர்கள் இருவர் பலி

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியா, பிதுருதாலகால மலையில் காவலில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர்கள் இருவர் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி இருவரும்; தம்மைதாமே சுட்டுகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எல்ல ஹேவகே அனுஷ மதுசங்க (வயது 24) மதுகம ஜே.எம்.சுசந்த (வயது 24) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். இவ்விருவரும் அலபலாதெனிய மற்றும் மொரவக ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக தற்பொழுது நுவரெலியா ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .