2026 மே 15, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 17 பேர் கைது

Kogilavani   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் இருந்து நேற்று காலை வரை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 17 பேரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் நடவடிக்கையின் கீழ், இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் முச்சக்கர வண்டி சாரதிகள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதானவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி கண்டி பிரதான நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .