2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இறக்குமதி செய்யப்படும் கிழங்குக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை

Sudharshini   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -டி.ஷங்கீதன்

நிதி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து, உணவுக்காக இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், புதன்கிழமை (22) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

நுவரெலியா மற்றும் ஊவா பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இது தொடர்பாக எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

தற்பொழுது நுவரெலியாவில் கிழங்கு அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதன் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. உருளைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய்க்கு மாத்திரமே விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை விவசாயிகளுக்கு எந்தளவிலும் போதுமானது அல்ல.

எனவே, இவ்விடயம் தொடர்பாக தான் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடமும் உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடமும் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்தே, இந்த தீர்மானத்தை நிதி அமைச்சர் மேற்கொண்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

புதிய இறக்குமதி வரி இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .