Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மத்திய மாகாணத்துக்குட்பட்ட தமிழ்மூல பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்களின்போது முஸ்லிம் பாடசாலைகள் புறக்கணிக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதின் மற்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று கல்வி அமைச்சர் அகில் விராஜ் காரியவசத்தை சந்தித்து பெருந்தோட்ட பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்துமாறு கோரிக்கையை முன் வைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய மாகாணம் உட்பட 11 மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட பிரதேசங்களில் தமிழ் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் மத்திய கல்வி அமைச்சினால் கோரப்பட்டிருந்தது.
பெருந்தோட்ட பிரதேசத்தில் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் உள்ளபோதிலும் எந்தவொரு பாடசாலையும் இந்த நியமனத்தில் உள்வாங்கப்படவில்லை என முஸ்லிம் பிரதிநிதிகளால் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
தமிழ் பாடசாலைகள் போன்று முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களும் நிரப்பட வேண்டும் என இச்சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டது.
முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு அதனை நிரப்புவது தொடர்பாக அமைச்சரவையில் பத்திரம் முன் வைக்கப்படும் என கல்வி அமைச்சரால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவரான ஏ.எம்.முகமட் முசாம்பில் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் பாடசாலைகளுக்கான ஆசிரியர் தெரிவு போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவான சுமார் 3000 ஆசிரியர்களுக்கு அடுத்த சில நாட்களில் நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago