2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி லொறியில் மாடுகளை ஏற்றிச்சென்ற நபர் கைது

Kogilavani   / 2015 ஏப்ரல் 23 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று வியாழக்கிழமை(23) அதிகாலை அனுமதிப்பத்திரமின்றி லொறியில் மாடுகளை ஏற்றிச்சென்ற நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மாடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

ரெதிதென்ன பிரதேசத்தில் இருந்து கல்முனைக்கு மாடுகளை ஏற்றிச் செல்லும் வழியில், வாழைச்சேனை பொலிஸிக்கு முன்பாக கடமையில் இருந்த பொலிஸார் வாகனத்தை பரிசோதனை செய்தபோதே 10 மாடுகளும் ஒரு கன்றும் லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

லொறியின் சாரதியை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.திப்புட்டுமுன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .