2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஹட்டன் தொழில் திணைக்களத்தை சுற்றி வளைத்த தொழிலாளர்கள்

Kogilavani   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒட்ரி மற்றும் லக்கம் தனியார் தோட்ட தொழிலாளர்கள் ஹட்டன் தொழில் திணைக்களத்தை நேற்று வியாழக்கிழமை(23) பகல் சுற்றி வளைத்ததால்; அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

தோட்டங்களில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தோட்ட உரிமையாளர்களை  கலந்துரையாடுவதற்கு பலமுறை அழைத்தும் அவர்கள் சமூகமளிக்காத காரணத்தால் மேற்படி தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து தோட்ட உரிமையாளருக்கும் தொழிற்சங்கங்களுகுமிடையில் நேற்று வியாழக்கிழமை(23) காலை முதல் பேச்சு வாரத்தை இடம்பெற்றது. அதனை கேள்வியுற்ற தோட்ட தொழிலாளர்கள் அங்கு கூடியதன் காரணமாகவே இந்த பதற்ற நிலை ஏற்பட்டது.


இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
மேற்படி தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம், முற்பணம் எனபன உரிய நேரத்தில் வழங்காமை, வேலை வழங்காமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஹட்டன் தொழில் திணைக்களத்தில் தொழிற்சங்கங்கள் முறையிட்டுள்ளன.

எனினும் ஒன்பது தடவைகள் தோட்ட உரிமையாளர்களை அழைத்தும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த லக்கம் தோட்ட தொழிலாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்யுமாறு  பொலிஸார் விடுத்த பணிப்புரைக்கு அமைய ஆர்ப்hபட்டக்காரர்கள் கலைந்;து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .