Kogilavani / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
இலங்கையில் முதலாவது பாரிய அளவிலான கழிவுநீர் முகாமைத்துவ செயற்திட்டத்தை 25,000 கோடி ரூபாய் செலவில் கண்டியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுவரை இப்படியான ஒரு திட்டம் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லை. மேற்படி வேலைத்திட்டத்தை, நகர அபிவிருத்தி வடிகால் அமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீம் கண்டி, ஹீரஸ்ஸகலவில் ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
'இன்று திண்மக்கழிவுப் பிரச்சினை போன்றே திரவக் கழிவுகளாலும் பாரிய பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கண்டி போன்ற புனித நகரப் பிரதேசங்களில் மழை நீர் தவிர்ந்த வேறு எதுவித கழிவுநீரும் சேராத வகையில் மேற்படி திரவக் கழிவு முகாமைத்துவம் திட்டமிடப்பட்டுள்ளது.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே 1992ம் ஆண்டு திட்டமிடப்பட்ட இவ்விடயம், இன்று 20 வருடங்களையும் கடந்துவிட்ட போதும் இன்று குறிப்பிட்ட துறைக்கு அமைச்சர் என்ற வகையில் எனது கையால் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு நேரடியாக நானல்லாத பலரது பங்களிப்பும் உண்டு.
குழாய் நீர் இணைப்பு போன்று நான்கு மடங்கு செலவில் சகல வீட்டுத் திரவகளும் குழாய்கள் மூலம் சேகரிக்கப்பட்டு பின்னர் மத்திய சேகரிப்புக் குழாய்கள் மூலம் பகுதி பகுதியாக ஒன்று சேர்க்கப்பட்டு அது சுத்திரிகரிக்கப்பட்டு பின்னர் திண்மக் கழிவு வேறாகவும் சுத்தமான நீர் மகாவலி கங்கைக்கும் சேர்க்கப்பட உள்ளன.
வீடுகளில் உள்ள கழிவறை கழிவு நீர், சமயலறைக் கழிவு நீர், குளியலறைக் கழிவு நீர் ஆகிய அனைத்து திரவக் கழிவுகளும் இத்திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்டு உரிய இடததுக்கு அனுப்பப்படும்.
இலங்கையில் எங்கும் இதுவரை ஆரம்பிக்கப்படாத ஒரு புதிய திரவக் கழிவு முகாமைத்துவ திட்டமாகும் இதற்கு மொத்தம் செலவாகும் பணத்தில் 18,000 கோடி ரூபாய்களை ஜெய்கா நிறுவனம் வழங்குகிறது. மிகுதியை எமது மத்திய அரசு வழங்குகிறது' என்றார்.
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago