Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை (25) நுவரெலியாவுக்கு விஜயம் செய்து ஆலயங்களிலும் விகாரைகளிலும் விசேட வழிபாட்டில் ஈடுபட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
இறம்பொடை அனுமான் ஆலயத்துக்கு நேற்றுக் காலை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் வரவேற்று ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து வௌன்டன் தோட்டத்திலுள்ள தொண்டமானின் இல்லத்தில் பகல் உணவு வழங்கப்பட்டது. பின்பு மாலை 2.00 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியா நகரிலுள்ள பௌத்த விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மாலை 3.10 மணியளவில் நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பிரதான வாசல் திருத்த வேலைகள் காரணமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் அவர் பின் வாசல் வழியே சென்று தரிசனத்தில் ஈடுபட்டார். இங்கு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை ஆலய செயலாளர் எம்.சந்திரன் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து வரவேற்றதோடு பொன்னாடையும் போர்த்தி கௌரவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதியுடன் இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்க, தலவாக்கலை லிந்துலை நகர சபைத்தலைவர் அசோக சேபால ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago
52 minute ago
1 hours ago