Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Sudharshini / 2015 மே 05 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்யவதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 70 இலட்சம் ரூபாய் செலவில் கேகாலை ரஜ மஹா விகாரையில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடம், குடிநீர் வசதி மற்றும் வழிபாட்டு மண்டபம் ஆகியவற்றை சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்; திங்கடக்கிழமை (4) திறந்து வைத்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் 1,350 வழிபாட்டு தலங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.மேற்படி வழிபாட்டு தலங்களுக்கு குடிநீர் வசதி மற்றும் மலசலகூடம் உட்பட பொது வசதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், மாகாண சபை உறுப்பினர் ஹர்ஷ சியம்பலாபிடிய, கலிகமுவ பிரதேச சபை தலைவர் கெலும் பதிரன ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
22 minute ago
36 minute ago