2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

1,000 ரூபாய் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மே 11 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுத்தருமாறும் கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்யுமாறும் கோரி காசலரீ, ஒஸ்போன் பிரதேச மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'அரச துறையினருக்கு பத்தாயிரம் ரூபாயும் தனியார் துறையினருக்கு 2500 ரூபாயும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் வருவாயை ஈட்டித்தரும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பெற்றுத்தருவதில் அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.

'தோட்ட கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கைசாத்து ஊடன்படிக்கை கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இன்னும் பெற்றுத்தரப்படவில்லை.

அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பேச்சுவார்தை நடத்தி ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுத்தர முன்வரவேண்டும். அத்தோடு கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்ய வேண்டும்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

ஓஸ்போன் தோட்ட மேல்பிரிவு தோட்ட தொழிலாளர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டமானது, ஹட்டன் பிரதான பாதை, ஒஸ்போன் சந்தியில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .