Sudharshini / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பசறையில் 37 வாக்காளர்களின் வாக்காளர் அட்டைகள் காணாமல் போயுள்ளதாக பசறை, மொரட்டுவௌ உப-அஞ்சல் அலுவலக அதிபர் டீ.எம்.குணவதி மற்றும் அப்பகுதிக்கான தபால் விநியோகஸ்த்தர் எச்.எம்.ரஞ்ஜித் ஆகியோர் பசறை பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (4) முறையிட்டுள்ளனர்.
மேற்படி, உப-அஞ்சல் அலுவலகத்திலிருந்து பசறைக்கு, வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் செயற்பாடு செவ்வாய்க்கிமை (4) ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையிலே, தபால் விநியோகஸ்த்தரின் பொறுப்பிலிருந்த வாக்காளர் அட்டைகளில் 37அட்டைகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago