Janu / 2023 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பெருந்தோட்டத்தை சேர்ந்த 09 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று 24 மணிநேரமும் தொடர்ச்சியாக நடனமாடி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இணைந்துள்ளனர்.

மலையகத்தை சேர்ந்த 07 இளைஞர்களும், 02 இளம்பெண்களும் 24 மணி நேரமும் தொடர்ந்து நடனமாடி இந்தியா நிகழ்த்திய சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இணைந்துள்ளனர்.
ஹப்புத்தளை, லிதுல மெரயா, அகரபதன, மிகமுவ மற்றும் டயகம ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் குழு 16-26 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள நடன பயிற்சி நிறுவனமொன்றில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சோழன் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதி சி.நாகவாணி ராஜாவின் மேற்பார்வையில் புதன்கிழமை (30) காலை 8 மணி முதல் வியாழக்கிழமை (31) காலை 8 மணி வரை 24 மணி நேரம் ஹட்டன் டன்பார் விளையாட்டு வளாகத்தில் இக் குழுவினர் நடனமாடினர்.

பெருந்தோட்டத்தில் 09 இளைஞர்கள் படைத்த உலக சாதனையை காண பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.


3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago