R.Maheshwary / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
அக்கரப்பத்தனை- மோர்சன் தோட்டத்திற்கு செல்லும் ஆறு கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதியானது, 30 வருடங்களாக புனரமைப்பு செய்யாத காரணத்தினால் வடிகான்களைப் போன்று காட்சியளிக்கின்றது.
மழைக்காலங்களில் இப்பாதையில் பயணிக்க முடியாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் வெள்ளம் வழிந்துச் செல்லும் நீரோடை போன்று காணப்படுகின்றது.
500க்கும் மேற்பட்ட மக்கள் இபாதையை பயன்படுத்தி வரும் நிலையில், 80க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் வாகன வசதிகள் இல்லாமல் நடந்து செல்லுகின்றனர்.
வீதி புனரமைப்பு செய்யப்படாமையால், எந்தவொரு வாகனமும் இவ்வீதியில் பயணிப்பதில்லை. எனினும் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் ஓட்டோக்கள் அதிக பணத்தை வசூலித்து பயணிக்கின்றன.
வீதியை சீர்திருத்தம் செய்து தருவதாக கூறி அரசியல்வாதிகள், வாக்குகளைப் பெற்றாலும் இன்னும் அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இதேவேளை, 10 வருடங்களுக்கு முன்பு இப்பாதையின் ஊடாக சென்ற வான் ஒன்று, 60 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானது இதன்போது மூவர் இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.
7 minute ago
16 minute ago
43 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
43 minute ago
20 Dec 2025