Freelancer / 2023 மே 18 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் நேற்று கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட காணி ஒன்றினை ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட 225 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட காணியை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு, 15 பேச் நிலப்பரப்பில் 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்ததுடன் அதில் ஒரு பகுதியை சட்டநடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R

9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026