Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
R.Maheshwary / 2023 ஜனவரி 15 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்எம்.ஹேவா
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு இதுவரை ஆறு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கே. எல். எஸ்.களுகம்பிடிய தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன இணைந்து கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளன.
மேலும், ஹட்டன் -டிக்கோயா நகரசபை, மஸ்கெலியா, நோர்வூட், அம்பகமுவ, ஹங்குரன்கெத்த, வலப்பனை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், அம்பகமுவ உள்ளூராட்சி சபைக்கு புதிய ஜனநாயக முன்னணி, மஸ்கெலியா உள்ளுராட்சி சபைக்கு சோசலிச சமனதா கட்சி மற்றும் கொட்டகலை உள்ளூராட்சி சபைக்கு இரண்டு சுயேட்சை குழுக்களும் பணத்தை செலுத்தியுள்ளன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago