Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 ஜனவரி 03 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
நுகர்வோர் அதிகாரசபையினரால் கடந்த 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கேகாலை மாவட்டத்தில் 652 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் கேகாலை மாவட்ட பிரதானி ஏ.எம்.ஜே. சமந்த அதபத்து தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கேகாலை, மாவனெல்ல, ருவன்வெல்ல, துல்ஹிரிய மற்றும் அவிசாவளை ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் அரசாங்கத்துக்கு 26இலட்சத்து 57ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்றார்.
பொருள்களுக்கான விலை காட்சிப்படுத்தாமை, நிர்ணய விலையை மாற்றியமை, நிர்ணய விலைக்கு அதிகமாக விற்றல், பொருட்களை மறைத்தல், நுகர்வோருக்கு தரமான பொருட்களை விநியோகிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்தாண்டு நாடு முழுவதிலும் நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கேகாலை மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
6 minute ago
34 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
34 minute ago
55 minute ago