Kogilavani / 2021 மே 11 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொத்மலை பிரதேசத்திலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 69 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேற்படித் தொழிற்சாலையில் பணிபுரியும் 799 ஊழியர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட அன்டிஜட்ன் பரிசோதனையிலேயே 69 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டது.
மேற்படித் தொழிற்சாலையில்,நுவரெலியா, கொத்மலை, புஸ்ஸல்லாவை, இராவணாகொட மற்றும் நாவலப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago