Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து, தங்களுக்கு வழங்கப்படவேண்டிய சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான பசளை மானியம், இதுவரை வழங்கப்படவில்லை என, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 23 சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலைமை காரணமாக, சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்கள் தமக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக, சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
2016ஆம் ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இணங்கவே, 2018ஆம் ஆண்டு பசளை மானியம் வழங்கப்பட்டது என்றும் 2017ஆம் ஆண்டு, தேயிலை மானியத்துக்கான விண்ணப்பங்கள் எதுவும் கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றுள்ளதாகவும் உடனடியாக இது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
21 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago