2025 ஜூலை 19, சனிக்கிழமை

கடன் விவகாரம்: மாறுபடும் கருத்துகள்

Princiya Dixci   / 2016 மார்ச் 04 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு, பியூமி பொன்சேகா 

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட கடன்களில், 75 சதவீதமான கடன்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் கடன் பணத்தைக் கொண்டு நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

'சர்வதேச முதலீடுகளின் அளவு இலங்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது' என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்தும் நாடுகளில், இலங்கை 14ஆவது இடத்தில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவரதன தெரிவித்திருந்தார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

'தற்போதைய அரசாங்கம் குறைந்த அளவிலான கடன் இருப்பதாக மக்களுக்குக் கூறினாலும், கடந்த அரசாங்கத்தால் பெறப்பட்ட பல்வேறு மறைமுகக் கடன்கள் இருக்கின்றன. இவ்வாறான மறைமுகக் கடன்களை வைத்திருக்கும் அரசாங்கத்தை மக்கள் எவ்வாறு நம்புவது?' என்று அவர் இதன்போது கேள்வியெழுப்பியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X