2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பாரம்பரிய உள்நாட்டு நெல் வகைகளை இனங்கண்டு கொள்வதற்கான பயிற்சி

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

பாரம்பரிய உள்நாட்டு நெல் வகைகளை இனங்கண்டு கொள்வதற்காக விவசாயிகளுக்கு முறையான பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு நெல் உற்பத்தியினை மீண்டும் அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என உள்நாட்டு விதை இனங்களைப் பாதுகாக்கும் செயற்திட்டத்தின் செயலாளர் அலெக்ஸ் தந்திரியாராய்ச்சி தெரிவித்தார்.

விவசாயிகள் பழைய நெல் இனங்களை இனங்கண்டு கொள்ளாததனால் பல்வேறு அமைப்புகள் போலியான விதையினங்களை விவசாயிகளுக்கு ஏமாற்றி விற்பனை செய்கின்றனர். விவசாயிகளுக்கு  பயிற்சி வழங்குவதன் ஊடாக இதனை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் மேலும்  தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .