2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆனந்தாக் கல்லூரியில் ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்துக்கும் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், கடந்த 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரையிலான காலப்பகுதியினை நல்லிணக்க வாரமாகப் பிரகடனப்படுத்தினார்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக நல்லிணக்க வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, பிரகடனத்தின் ஊடாக வேறுபட்ட இன, மத, கலாசார மற்றும் பிரதேச சமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாடு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் நிலைபேறானதும் நிரந்தரமானதுமான சமாதானம் என்பவற்றை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையை ஜக்கியமானதும் வளமானதும் செழிப்பானதுமான நாடாக மாற்றுவதாகும்.

ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம், ஆனந்தாக் கல்லூரியில் நேற்று (17) இடம்பெற்றது.
இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, ஆனந்தாக் கல்லூரி அதிபர் கீர்த்திரட்ன, உப அதிபர், அமைச்சின் சிரேஷ்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் பங்குபற்றி நல்லிணக்கத்துக்கான உறுதிமொழியினை எடுத்தனர்.

மாணவர்களினால் மும்மொழிகளிலும் நாட்டின் இன, மத, மொழி, பிரதேசம் தொடர்பான பல்வகைத் தன்மையின் செழிப்பு மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும், ஆசிரியர்களையும் மாணவர்களையும் சமாதானத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் முகவர்களாகவும் தூதுவர்களாகவும் சக்திப்படுத்தும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X