2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஈரான் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 11ஆவது அமர்வு நாளை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஈரான் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 11ஆவது அமர்வு, கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நாளை புதன்கிழமை (24) காலை நடைபெறவுள்ளது. 

இவ் ஆணைக்குழுவின் அமர்வுகளுக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரானிய குடியரசின் வர்த்தக அமைச்சர்  ஹமிட் சிட்சியன் மற்றும் இலங்கைக்கான ஈரானின் தூதுவர் மொஹமட் ஷெயிரி மீரானி உட்பட ஈரானிய உயர்மட்ட வர்த்தகப் பிரமுகர்கள் கடந்த திங்கட்கிழமை (22) மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்கள்.  

இவர்களை விமான நிலையத்தில் வைத்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தியோகபூர்வமாக வரவேற்றார். 

பிரசித்திவாய்ந்த இவ் ஆணைக்குழுவின் அமர்வு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஈரானிய குடியரசின் வர்த்தக அமைச்சர் ஹமிட் சிட்சியன் மற்றும் இலங்கைக்கான ஈரானின் தூதுவர் மொஹமட் ஷெயிரி மீரானி ஆகியோரால் தலைமை தாங்கப்படும்.
 
ஈரான் மீதான சர்வதேச வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இரு நாடுகளுக்குமிடையிலான  புரிந்துணர்வு, சிறந்த பொருளாதார ரீதியிலான உறவுகளை நீடிப்பதற்கான வழிமுறைகள், வர்த்தக நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கான தேவைப்பாடுகள்  ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் முதலீடு உட்பட தரத்  தேவைப்பாடுகள் தொடர்பாக இக்கூட்டு ஆணைக்குழுவின்   அமர்வின் போது ஆராயப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X