Princiya Dixci / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் டிசெம்பர் மாதம் முடிவடைவதற்குள் 256 உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாக முன்னெடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
வருடாந்தம் 10 மில்லியனுக்கும் குறைவாக வருமானம் பெற்றுக்கொள்வதாக அடையாளம் காணப்பட்ட நாட்டிலுள்ள 335 உள்ளூராட்சி மன்றங்களில் 79 உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே மிகுதி 256 உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளையும் துரிதப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
இதேவேளை, ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 10 இலட்சம் ரூபாயை அமைச்சு ஒதுக்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை டிசெம்பர் மாதத்துக்குள் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
கட்டடங்கள், வீதிகள், வடிகான்கள், சிறிய பாலங்கள் என்பனவற்றைப் புனர்நிர்மாணம் செய்தல் மற்றும் நீர் விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள், இத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப் படவுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் கஷ்டப்பிரதேசங்களில் இயங்கும் உள்ளூராட்சி மன்றங்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago