Thipaan / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனை, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் மிரொஸ்லவ் ஜென்கா, இன்று(24) சந்தித்து உரையாடியுள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைக்கான ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி, நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் கீதா சபர்வால் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிபார்சுகளுக்கான இலங்கையின் உள்நாட்டு பங்களிப்பு, புதிய ஆட்சியின் கீழ் இலங்கையில் தற்போதைய நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னேற்றம் அவற்றுக்கான சமகால தடைகள் மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சின் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐ.நா சபையின் உதவி மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .