Editorial / 2023 நவம்பர் 23 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைவிலங்கிலிருந்து தப்பி ஓட முயன்ற சந்தேக நபரை பிடிக்க கால்வாயில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கால்வாயில் குதித்து காணாமல் போயுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜாஎல காவல்துறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி திரதாபன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் காணவில்லை.
சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைவிலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அருகில் உள்ள ஜாஎல கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதில் பொலிஸார் வெற்றி பெற்றுள்ளனர்.இந்நாளில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஜாஎல கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் நடவடிக்கைகள் கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜாஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகார பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago