Editorial / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலங்கம பிரதேசத்தில் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் கொலை சம்பவம் தொடர்பில் கந்தானையை சேர்ந்த 22 வயதான இளைஞன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து வீட்டின் உரிமையாளரான வர்த்தகரின் சடலம் கடந்த 02 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.
உயிரிழந்தவர் பிரபல ஆடையகம் ஒன்றின் உரிமையாளரான, தொழிலதிபர் அந்த வீட்டிற்குச் செல்வதாக தனது சகோதரியிடம் கூறிவிட்டு கடந்த மாதம் 31 ஆம் திகதி சென்றுள்ளார்.
அவர் மீண்டும் திரும்பவில்லை. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவரது சடலம் நீச்சல் தடாகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago