Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 23 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையானது, அம்மோசடி தொடர்பில், நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருக்கின்ற விவாதத்தை நீர்த்துப்போகச்செய்யும் நடவடிக்கையாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியது.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில், அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் நாளை(24) இடம்பெறவிருக்கின்றது.
இது தொடர்பில், கருத்துத் தெரிவித்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, “டியூ.குணசேகரவின் கோப் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தது போல, இம்முறை கோப் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, “பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில், கோப் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு அவசியமற்றது” என, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago