Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி மற்றும் ஹமில்டன் கங்கைகளில் குப்பைகளைக் கொட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 35 பேரையும் பொலிஸ் பிணையில் விடுவிக்க நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படை அதிகாரிகள் குழு மேற்கொண்டிருந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேற்குறிப்பிட்ட 35 பேரும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இதில் 25 பெண்கள் உள்ளடங்குவதாகவும் அவர்களில் 20 பேர் பெஹலியகொட மற்றும் வத்தளைப் பிரதேசத்திலும் மிகுதி 05 பெண்கள் உட்பட 07 பேர் ஹேகித்த மற்றும் மோதரை பிரதேசத்திலும் இருந்து களனி கங்கையில் குப்பை கொட்டியபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago