Princiya Dixci / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் திறந்த பல்கலைக்கழகத்துக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் எட்டுப் பேர் காயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் நகரிலிருந்து கற்பிட்டி தளுவப் பிரதேத்தை நோக்கிச் சென்ற 'கென்டர்' வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த லொறியின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், லொறியில் பயணித்த 11 பேரில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளக புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


28 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
9 hours ago