2025 மே 07, புதன்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 2 பிள்ளைகளின் தந்தை கைது

Gavitha   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின்  பேரில், 43 வயதுடைய நபரொருவரை நேற்று திங்கட்கிழமை (31) கைது செய்துள்ளதாக, நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தயாரால், பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைபாட்டையடுத்தே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், நவகத்தேகம பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (25), தனிமையில் இருந்த சிறுமியையே இவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். குறித்த நபர், சிறுமியின் உறவுக்காரர் என்பதனால், சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சற்று தாமதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஏற்கெனவே இரண்டு முறை திருமணமானவர் என்றும், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X