Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 01 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொற்றா நோய்கள் தொடர்பிலான சிறப்புச் செயற்றிட்டம் ஒன்றினை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, சுகாதார சேவைப் பணிப்பாளரும் விசேட வைத்திய அதிகாரியுமான பாலித மஹீபால தீர்மானித்துள்ளார்.
'தேசிய போசனை மாதம்' தொடர்பில், கொழும்பில் நேற்று செவ்வாயன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'தாய்ப்பாலினை குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி ஊட்டுவதில் முன்னிலையில் உள்ள ஒரு நாடாக இலங்கை உள்ளது. இதில், நூற்றுக்கு 78 சதவீதம் வெற்றிபெற்றுள்ள ஒரு நாடாகவும் எமது நாடு விளங்குகின்றது' என்றார்.
'பாடசாலை மாணவர்கள் மத்தியில் போசனை உணவுப் பழக்கவழக்கம் கட்டாயமானது என்பதாலேயே, சுகாதார அமைச்சினால், பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை சட்டதிட்டங்கள், செயற்றிட்டங்கள் தொடர்பிலும் பாரியதொரு இறுக்கமான செயற்பாட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிக போசனை மட்டத்தினைக் கொண்டுள்ள ஒரு மாவட்டமாக கொழும்பு மாவட்டம் திகழ்கின்றது. நாடளாவிய ரீதியில், மரக்கறி மற்றும் பழங்களின் நுகர்வுத் தன்மையானது குறைவடைந்துள்ளது. தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான நிறையுணவான, ஒருவேளை உணவுத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு தொற்றா நோய்ப்பிரிவு முடிவெடுத்துள்ளது.
அதற்கான நிதியும் சுகாதார அமைச்சினால் ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்றிட்டமானது நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளதாக' டாக்டர் பாலித மஹிபால மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
47 minute ago
57 minute ago