Princiya Dixci / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.பி.எம். முக்தார்
பேருவளை பகுதியில் நீதவான் நீதிமன்றம் மற்றும் காதி நீதிமன்றம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பேருவளை, பயாகலை மற்றும் அளுத்கமை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளின் வழக்கு விசாரணைகள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்திலேயே நடக்கின்றது.
காதி நீதிமன்ற வழக்குகளும் இப்பகுதி பாடசாலையிலேயே இடம்பெறுகின்றது.
பேருவளை பகுதியில் நீதவான் நீதிமன்றம் மற்றும் காதி நீதிமன்றம் ஆகியவற்றை அமைப்பதன் மூலம் தாங்கள் பெரும் நன்மையடைவோம் என்றும் நீதி அமைச்சு இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .