Gavitha / 2016 மார்ச் 28 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில், சுமார் 5,000 கருத்துக்கள் இதுவரை மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக, மக்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும் விசேட குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசியல் தலைவர்கள் மற்றும் மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியோரின் கருத்துக்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் நடவடிக்கை, எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து கருத்துக்களும் அடங்கிய அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago