2025 மே 07, புதன்கிழமை

ரஞ்சித் ரூபசிங்கவின் இடத்துக்கு சகாவுல்லாஹ்

Princiya Dixci   / 2015 நவம்பர் 05 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

கடந்த வெள்ளிக்கிழமை காலமான மேல் மாகாண சபை உறுப்பினர்  ரஞ்சித் ரூபசிங்கவின் இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையிலுள்ள எம்.எஸ்.எம். சகாவுல்லாஹ் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு 21,579 விருப்பு வாக்குகளைப் பெற்றார். தற்போது நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராகவுள்ள எம்.எஸ்.எம்.சகாவுல்லாஹ், மேல் மாகாண சபைக்கு தெரிவாவதன் மூலம் கம்பஹா மாவட்டத்திலிருந்து  ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சி சார்பாக மேல் மாகாண சபைக்கு தெரிவாகும் முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெறுவார்.

மேல் மாகாணப் பாடசாலைகளின் கல்வித் வளர்ச்சிக்குத் தன்னால் அதிக பங்களிப்பை வழங்க முடியுமெனவும் தனது பெற்றோர்களும் ஆசிரியர்களாக இருந்தவர்கள் எனவும் தானும் ஆசிரியராக பணியாற்றியவர் எனவும் ஜனாப் சகாவுல்லாஹ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X