Freelancer / 2024 மார்ச் 09 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம, மிரிஸ்வத்த பிரதேசத்தில் நேற்று (8) இரவு இடம்பெற்ற விபத்தில், தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான தந்தை மற்றும் 8 வயதான மகன் எனத் தெரியவந்தது.
விபத்தில் பலியானவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன், சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற குறித்த லொறியின் சக்கரம் ஒன்று திடீரென வெடித்ததில், லொறி வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியமை விசாரணைகளில் தெரியவந்தது.
இதனையடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். S
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025