2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவு வரட்சி'

Niroshini   / 2017 ஜனவரி 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வரட்சிக்குப் பலரும் இயற்கையையே குற்றஞ்சாட்டிவருகிறார்கள். எனினும், அது இயற்கையின் கொடூரம் அல்ல. இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவுதான் இந்த வரட்சி என்று, வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு விவசாய அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்குரிய சாதனை விவசாயிகளைக் கௌரவிக்கும் உழவர் பெருவிழா, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

“எமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள். அப்போதெல்லாம் மாரி பொய்க்கவில்லை, இயற்கை எங்களை வஞ்சிக்கவில்லை.  நாங்கள் இப்போது, பசுமைப்புரட்சியின் பெயரால் விவசாய நிலங்களை வன்புணர்ச்சி செய்து வருகிறோம். நச்சு விவசாய இரசாயனங்களால் பூமியின் மேனியெங்கும் நனைத்து வருகிறோம்.

ஆழ் குழாய்க் கிணறுகளைத் தோண்டி நிலத்தடி நீரையெல்லாம் வீணாக வாரியிறைத்து வருகிறோம். இயற்கைக்கு நாங்கள் இழைத்துவரும் இத்தகைய கொடூரங்களின் விளைவாகவே, கடும் வரட்சியும் பெரும் வெள்ளமும் ஏற்படுகிறது.

இயற்கையின் இந்தச் சீற்றங்களை இயற்கையின் கொடூரங்களாகப் புரிந்துகொள்ளாமல் இயற்கை எங்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கைகளாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்யாமல் எமது விவசாயச் செயன்முறைகளை மீளவும் இயற்கையோடு இணைந்ததாக நாங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். தவறின், இயற்கை எங்களை ஏதோ ஒரு வழியில் தண்டிப்பதைத்  தவிர்க்க முடியாததாகவே இருக்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X