Princiya Dixci / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டுமென கோரிக்கை விடுத்தே தோட்டத்தொழிலாளர்கள் போரடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கை உடன் நிறைவேற்றப்படவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
'தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சங்கத்துக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள், சுமார் ஒருவருடத்துக்கும் அதிகமாக இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
'இதன் காரணமாக தோட்டத்தொழிலாளர்களுக்காக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது கால தாமதமாகிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக தோட்டத்தொழிலாளி ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் சம்பள வழங்கப்படும் என வாக்குறுதியும் வழங்கப்பட்டது.
'இருப்பினும், தற்போது வரையில் எதுவுமே நடைமுறையில்முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவிருக்கும் தோட்டத்தொழிலாளர்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.
'இதனைச் சாதாரணமானதொரு போராட்டமாகக் கருதி அதனை நசுக்குவதற்கு முற்படக்கூடாது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
'கடந்த காலங்களில் அந்த மக்களின் ஆணை பெற்றவர்கள் அவர்களுக்கான நியாயமான விடயங்களைச் செய்யத்தவறியதன் விளைவாகவே புதிய தெரிவுகளைத் தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
'ஆகவே, அவர்களும் அந்த மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்காது உடனடியாக அம்மக்களின் விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கவேண்டும் எனக் கோருகின்றேன்.
'அதேவேளை இவ்விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கையை உடன் எடுக்கவேண்டுமென பகிரங்கமான கோரிக்கை விடுப்பதோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும்அவரின் கவனத்துக்கு இவ்விடயத்தை மீண்டும் கொண்டு செல்வதற்கு உள்ளேன்' என்றார்.
9 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Nov 2025