2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

'தேசிய ஒருமைப்பாட்டுத் திரைப்பட விழா 2012'

Kogilavani   / 2012 ஜூலை 12 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தேசிய ஒருமைப்பாட்டுத் திரைப்பட விழா 2012' எதிர்வரும் 16 ஆம் திகதி தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் திரையரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

தேசித்தின் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சானது சமூக ஒருமைப்பாட்டு வாரம் ஒன்றை பிரகடனப்படுத்தி இத்திரைப்பட விழாவினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

தொடர்ந்து 22 ஆம் திகதி மட்டும் நடைபெறவுள்ள இத்திரைப்பட விழாவில் தினமும் 5.30 மணிக்கு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இதனடிப்படையில், எதிர்வரும் 16 ஆம் திகதி சிங்கள மொழித் திரைப்படமான 'சருங்கலய' (தமிழ் உபதலைப்புடன்), 17 ஆம் திகதி இலங்கை தமிழ் திரைப்படமான 'பொன்மணி' (சிங்கள உபதலைப்புடன்), 18ஆம் திகதி ஜேர்மன் திரைப்படமான 'குட் பாய் லெனின', 19 ஆம் திகதி சிங்கள திரைப்படம் 'விது' (தமிழ் உபதலைப்புடன்), 20 ஆம் திகதி ஈரானிய திரைப்படாமான 'சில்ரன் ஒப் ஹெவன்', 21 ஆம் திகதி பிரான்ஸ் திரைப்படமான 'த அன்டச்பல்ஸ்', 22 ஆம் திகதி ஆங்கில திரைப்படமான 'இன்விக்டுஸ்' ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இத்திரைப்படங்களை பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X