2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 39 பேருக்கு பிணை; நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எம்.முனாஷா)

படகுகள் மூலமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் இன்று புதன்கிழமை ஆஜர்செய்யப்பட்ட 39 பேருக்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.

நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி.அமரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த சந்தேக நபர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு உதவி புரிந்த நான்கு சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X