2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

டெனிம் காற்சட்டை திருடியவருக்கு 3 மாத சிறை

Super User   / 2012 ஜூன் 08 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (லக்மால் சூரியகொட)

புறக்கோட்டையிலுள்ள உலக சந்தைத் தொகுதியில் டெனிம் காற்சட்டையொன்றை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் ஒருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று 3 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2000 ரூபா பெறுமதியான இக்காற்சட்டையை பணம் செலுத்தாமல் சந்தேக நபர் எடுத்துச் சென்றபோது, கடை உரிமையாளரால் அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டதாக பின்னர் கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சந்தேக நபர் தொடர்பான கைரேகை பதிவுகளையும்  பொலிஸார் சமர்ப்பித்தனர். இந்நபர் இதற்கு முன்னரும் இதேபோன்ற குற்றத்தை புரிந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் முந்தைய குற்றங்களையும் கருத்திற்கொண்ட நீதவான், 3 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .