2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் பட்டதாரி பயிலுநர் 39பேருக்கு நியமனம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

பட்டதாரி பயிலுநர் 39 பேருக்கு இன்று நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நியமனம் பெற்றுள்ள இவர்கள் நீர்கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நீர்கொழும்பு - உடையார் தோப்பு பிரஜா சேவை மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத்குமாரவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீர்கொழும்பு பிரதேச செயலர் ஏ.ஆர்.அலவத்த, பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நியமனக் கடிதம் வழங்கப்பட்டவர்கள் கம்பஹா மாவட்டம் மற்றும் நீர்கொழும்பு பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X