Kogilavani / 2011 ஏப்ரல் 23 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.கோகிலவாணி)
.jpg)
இலங்கைத் திரைப்படக் கல்லூரியின் பத்து குறுந் திரைப்படங்களை வெளியிடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது.
கவிஞர் மருதூர் மஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வி.புத்திரசிகாமணி, த. சித்தார்த்தன், திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குமார் அபேசிங்க, புரவலர் ஹாசிம் உமர் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
திரைப்பட கலைஞரும், தயாரிப்பாளருமான நிலாப்பிரியன் தௌபீக்கை அதிபராக கொண்ட 'மாஸ் திரைப்படக் கல்லூரி'யில் ஒருவருட கற்கை நெறியை பூர்த்திசெய்த மாணவர்கள் தயாரித்த 10 குறுந் திரைப்படங்களே இந்நிகழ்வில் திரையிடப்பட்டன.
மனசு, மனிதம், அழைப்பு, விதி, இலக்கு, லெக், ஸ்டொப், சிவா, செருப்பு, குட் செலக்சன் ஆகியனவே மேற்படி பத்து குறுந்திரைப்படங்களாகும்.
அத்திரைப்படங்களின் இறுவெட்டுக்களும் இந்நிகழ்வின் போது வெளியிடப்பட்டன. இறுவெட்டின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.
இத்திரைப்படங்களை இயக்கிய கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago