2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மீடியா போரத்தின் 16ஆவது வருடாந்த மாநாட்டில் இந்திய பேச்சாளர் பாத்திமா முஸப்பீர் சிறப்புரை

Super User   / 2012 ஜூன் 28 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 16ஆவது வருடாந்த மாநாடு நாளை சனிக்கிழமை டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையிலுள்ள தபால் திணைக்கள தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில்  தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பொது செயலாளர் பாத்திமா முஸப்பீர் சிறப்புரையாற்றவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், எஸ்.பியசேன, வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் எஸ்.நடராஜா, மானா எம்.எம்.மக்கீன், நவமணி பிரதி ஆசிரியர் தாஹா எம்.முஸம்மில், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை பணிப்பாளர் எஸ்.எம்.ஹனீபா, அரச தகவல் திணைக்கள உத்தியோகத்தர் நூருல் அய்ன் நஜ்முல் ஹுசைன், நவமணி விவரண பகுதி ஆசிரியர் ஏ.எல்.எம்.சத்தார் மற்றும் அறிவிப்பாளர் ஆயிஷா ஜுனைதீன் ஆகிய ஒன்பது சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்வுள்ளனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடக விபரக்கொத்தின் 4ஆவது பதிப்பும் வெளியிடப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • meenavan Friday, 29 June 2012 01:59 AM

    கௌரவப்படுத்தபடுவோர் பட்டியலில்உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுள், ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் தன்னால் முடிந்த சேவையை செய்வது கௌரவபடுத்தளுக்கு பொருத்தம் ஆனால் மற்றவர்? எதுவானாலும் 16 வருட முஸ்லிம் மீடியா போரேம் நிறைவுக்கு வாழ்த்துகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X