2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நீர்கொழும்பில் 'வாழ்க்கை முயற்சியாண்மை வியாபார கண்காட்சி -2012'

Kogilavani   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா, ஜுட் சமந்த)

 'ஊக்கத்துடன் முன்னேறுவோம்' என்ற தொனிப் பொருளில் வாழ்க்கை முயற்சியாண்மை வியாபார கண்காட்சி -2012 நேற்று சனிக்கிழமை நீர்கொழும்பு கடோல்கலே விளையாட்டு மைதானத்தில்  ஆரம்பமானது.

இக் கண்காட்சியை பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஏ.கே.அலவத்த, 'வேர்ல்ட் விசன் லங்கா' நீர்கொழும்பு நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முகாமையாளர் சஞ்சீவ ரொட்ரிகோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்காட்சியில் முன்னக்கர, கடற்கரைத் தெரு, பிட்டிபனை, சிறிவர்தனபுர  ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களின் கைவினை பொருட்கள் காட்சிக்கு வைக்கபட்டிருந்தன.

இதன்போது, நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவிற்கு இருபது இலட்சம் ரூபா பெறுமதியான டிரக்டர் வண்டி ஒன்று 'வேல்ட் விசன்
லங்கா' நீர்கொழும்பு நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தினரால் நீர்கொழும்பு மேயரிடம் வழங்கப்பட்டது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .