2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ரூ. 30 இலட்சம் பெறுமதியான அமெரிக்க டொலர்களை கடத்த முயன்ற இருவர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 03 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாலைதீவுக்கு 22ஆயிரம் அமெரிக்க டொலர்களை (30 இலட்சம் ரூபாய்) கடத்திச் செல்ல முற்பட்ட இருவரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

காற்சட்டைப் பைகளில் வைத்து மறைத்தே இவர்கள் இந்த அமெரிக்க டொலர்களை கடத்த முற்பட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்ட இருவரும் பொரளை மற்றும் சிலாபம் பிரதேசங்களைச் சேர்ந்த கருவாடு விற்பனையாளர்கள் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். (தீபா அதிகாரி, குமாரசிறி பிரசாத்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X