Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 மார்ச் 20 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று பேரினைக் கொண்ட குடும்பமொன்று வாழ்வதற்கு மாதாந்தம் ரூபாய் 7500 வருமானம் போதுமானதென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஹோமாகம, முல்லேகமவில் மகப்பேற்று மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றை நேற்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பந்துல மேற்படி கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
அரசாங்கம் வரவு-செலவு திட்ட வரிமூலமான வருமானமாக 1000 பில்லியன் ரூபாவினை மாத்திரமே பெறுகிறது. இது உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரிதாகவே இருக்கும். ஆகையினால் வெளிநாட்டு கடனுதவிகளை நாடவேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் இருக்கிறது. நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, விமானநிலையம், வைத்தியசாலை, துறைமுக அபிவிருத்தி போன்றவற்றுக்கு இந்த வெளிநாட்டு கடனுதவிகள் பெரிதும் உதவுகின்றன. வெளிநாட்டு கடனுதவிகளை பெறும்வரையில் உள்நாட்டு அபிவிருத்திகள் சாத்தியமாகாது.
விவசாய அமைப்புகள் நெல் விலையை அதிகரிக்கக் கோருகின்றன. நெல் கொள்வனவு விலையினை 5 நிமிடங்களின் அமைச்சரவை தீர்மானத்தினை பெற்று 100 ரூபாயாக அதிகரிப்பது இலகுவானது. ஆனால் விவசாயிகள் ஒருவிடயத்தினை நன்கு உணர வேண்டும். நெல் கொள்வனவு விலையினை நாங்கள் அதிகரித்தால் அரிசியின் விலை 200 ரூபாவினை தாண்டிவிடும். நிர்வாக திட்டமிடல் என்பது போஸ்டர் ஒட்டுவதுபோல் இலகுவானதல்ல. அரிசியினால் பல அரசாங்கங்கள் மாறிய வரலாறும் உண்டு.
அரிசி விலை அதிகரிக்காது என்று நாங்கள் கூறவில்லை. பொருட்களின் விலையதிகரிப்புக்கு ஏற்ப சம்பளமும் அதிகரித்து வந்துள்ளது. அன்று அரச உத்தியோகத்தரின் சம்பளம் 80 ரூபாவாக இருந்தது. ஆனால் இப்போது அது பல மடங்காக அதிகரித்திருக்கிறது. இது பொருட்களின் விலையேற்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட மாறுதல் என்பதை உணர வேண்டும்.
கல்வி திணைக்களத்தினால் பல பாடசாலைகளில் மாணவ விடுதிகள் இயங்குகின்றன. இங்குள்ள மாணவர்களுக்கு மூன்றுவேளை உணவு கொடுத்து, இரண்டுவேளை தேநீரும் கொடுக்கப்படுகிறது. இதற்கு ஒரு மாணவனுக்கு செலவாவது வெறும் 2500 ரூபாய் மாத்திரமே. இதனடிப்படையில் மூன்று அங்கத்துவர்களைக்கொண்ட குடும்பமொன்று புத்திசாலித்தனமாக வாழ்வதற்கு 7500 ரூபாய் போதுமானதாக இருக்கும். ஆனால், பெரும்பாலானவர்கள் ஆடம்பரங்களை விரும்புகிறார்கள். உணவு விடுதிகளின் சாப்பிடுவதையும் அனாவசியமாக செலவு செய்வதிலேயுமே பலர் காலம் தள்ளுகின்றனர். அண்மையில் ஒரு நட்சத்திர விடுதி விருந்துபசாரத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கு ஒருவருக்கான உணவு 6500 ரூபாயாக இருந்தது. இதுபோன்ற அனாவசிய, ஆடம்பர செலவுகளை நாம் தவிர்ப்பது சிறந்தது.
இலங்கையின் சனத்தொகையினைவிட கைத்தொலைபேசிகள் அதிகமாக இருக்கிறது. அதேபோல் ஆடம்பர வாகனங்களும் தாராளமாக இருக்கின்றன. இதனால்தான் வாழ்க்கைசெலவு அதிகம் என பலர் கூச்சலிடுகின்றனர். ஆகையினால், ஆடம்பரங்களையும் படோபகாரங்களையும் தவிர்த்து புத்திசாலித்தனமாக வாழ்ந்தால் நாடும் வளம்பெறும், நாமும் வளம் பெறுவோம். (முதித்த தயனாநாத)
ஒட்டமாவடி ஜெமீல் Tuesday, 20 March 2012 11:57 PM
இங்கு அமைச்சரின் கருத்துக்கு கொமன்ட்ஸ் தெரிவித்தவா்களில் ஒருவா்கூட அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாது நிராகரித்ததிலிருந்தே பொய்யான கருத்துக்கணிப்பு என்பது உறுதியாகிறது. அரச வரிச் சலுகைபெற்று வாங்கிய பிராடோ வாகனத்திலும் அரசாங்க இலவச சிறப்புச் சலுகைகளிலும் வாழ்க்கை நடாத்தும் இவா்களுக்கு எங்கே புரியப்போகிறது எமது
கஷ்ட்ட நஷ்டம். (சிலவேளை அமெரிக்க டொலரில் சொன்னாரோ?)
Reply : 0 0
riyas Tuesday, 20 March 2012 08:23 PM
எப்படி எல்லாம் மக்களை மடையர்களாக்குகிறார்கள்.
Reply : 0 0
jw Tuesday, 20 March 2012 08:31 PM
அட அட அட என்ன அழகு, உங்களைப் போலவே உங்கள் கருத்தும்.
Reply : 0 0
Rafi Tuesday, 20 March 2012 09:02 PM
ஆடம்பர வாகனம் ஆடம்ப உணவு தேவையில்லை என்றால் இந்த நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, விமானநிலையம், வைத்தியசாலை, துறைமுக அபிவிருத்தி எதற்கு????
Reply : 0 0
Ramzy Tuesday, 20 March 2012 09:13 PM
கரண்டு பில் மட்டுமே 8000.00 வருதே. அமைச்சர் சும்மா காமடி பன்றார் போல. அவரைத் திட்டாதீங்கப்பா.
Reply : 0 0
அன்பாளன் Tuesday, 20 March 2012 09:41 PM
நீங்கள் மாதத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறீர்களோ ? நான்கு பக்கமும் கடன் சூழ்ந்த தீவாம் இலங்கை. எல்லாம் அரசியலால்தான்.
Reply : 0 0
dravid Tuesday, 20 March 2012 09:46 PM
கரண்டு பில், தண்ணி பில் இன்னும் பல வாழ்கை சுமைகளை அரசாங்கம் அதிகரித்து விட்டு, வீர வசனம் பேசும் அரசியல் வேறு எந்த நாட்டிலும் இல்லை.
Reply : 0 0
Mohi Tuesday, 20 March 2012 09:58 PM
அடடா இந்த புத்திசாலி இவளவு காலமும் எங்கே இருந்தார் ? ஏன் இப்படிப்பட்ட புத்திசாலியை விட்டு விட்டு மற்றவர்களை ஜெனீவாவுக்கு அனுப்பினார்கள்.....?
Reply : 0 0
nafee Tuesday, 20 March 2012 10:15 PM
அப்போ நம்மட பந்துலவிற்கு மாத சம்பளம் 7500 Rs கொடுங்க.
Reply : 0 0
Maruthooraan Tuesday, 20 March 2012 10:19 PM
அமைச்சர் ஏந்த உலகத்தில் வாழ்கின்றார். அமைச்சர் அவர்களின் மாத சம்பளத்தை உடனடியாக பத்தாயிரமாக குறையுங்கள் அப்போ தெரியும்.
Reply : 0 0
pradeep Tuesday, 20 March 2012 07:10 PM
அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்
Reply : 0 0
faseer Wednesday, 21 March 2012 03:11 AM
இவரெல்லாம் ஒரு அமைச்சர் , அதுவும் கல்வி அமைச்சர் .. முதல்ல ஸ்கூல் பொய் நல்லா படிக்க சொல்லுங்க.
Reply : 0 0
kanavaan Wednesday, 21 March 2012 03:15 AM
மானிய அடிப்படையில் பாராளுமன்றத்தில் மூன்று நேரமும் ஒரு மாதத்திற்கு சாப்பிடவா இவ்வளவு தொகை அமைச்சரே?
Reply : 0 0
ishaq Wednesday, 21 March 2012 04:53 AM
நீங்கள் எல்லாம் கல்வி அமைச்சராக இருக்கிறீர்கள்,,,,
7500 என்ன 75 என்றாலும் சரிதான்
இலங்கையின் தலைவிதி
இல்லை எங்கட தலைவிதி ஐயா......
Reply : 0 0
ashraff Wednesday, 21 March 2012 02:02 PM
கடுப்பேத்றார்?? தன்வீட்டு நாயின் செலவீனத்தை தவறுதலாக மக்களுக்கு ஒப்பிட்டு விட்டார். பாவம் விடுங்கப்பா.
Reply : 0 0
ameen Wednesday, 21 March 2012 05:09 PM
Mr. Bandula, Do u manage ur family exp with 7500?
Bullshit......
Reply : 0 0
kuru Wednesday, 21 March 2012 06:29 PM
இந்தமைச்சரின் - அமைச்சு, எம்பி,சொத்துபத்து எல்லாவற்றையும் பறித்து மூன்று பேருக்கு 7500 ரூபாவீதம் இவரிடம் கொடுத்து பார்ப்போம்.
Reply : 0 0
mr,janeefer Wednesday, 21 March 2012 07:52 PM
எப்படியல்லாம் யோசிக்கிறாங்கப்பா ?
Reply : 0 0
Jawahir Wednesday, 21 March 2012 08:15 PM
கடுப்பேத்றார் மைலார்ட்,
Reply : 0 0
samuka sewakan Wednesday, 21 March 2012 10:42 PM
ஹஹா இவருக்கு கல்வி அமைச்சா ? என்ன கொடுமை. இவரை முதல கல்வி கற்க ஆரம்ப கல்வி பாடசாலைக்கு அனுப்ப வேணும். இப்படி பட்டவர்களை அமைச்சர் ஆகின நாடு எப்ப முன்னேறும்? வாய்க்கு வந்தது எல்லாம் பேசி சும்மா கடுப்ப ஏத்தாதிங்க.
Reply : 0 0
Ruzan Tuesday, 20 March 2012 04:45 PM
அரசுடன் சேர்ந்த பின்னர் உங்களுக்கும் புத்தி இன்னும் மோசமாய் போயிட்டு....! பத்து நட்களுக்கு வேணும்னா சமாளித்து கொள்ள இந்த தொகை போதும்.
Reply : 0 0
shiyani Tuesday, 20 March 2012 02:39 PM
WOW..... WHAT A BRAIN YOU HAVE.... BANDULA........
Reply : 0 0
pasha Tuesday, 20 March 2012 02:44 PM
அமைச்சரின் கூற்று படி உணவு உண்பது மட்டும் தான் வாழ்கை என்று நினைக்கிறார் போல
Reply : 0 0
meenavan Tuesday, 20 March 2012 02:55 PM
பொருளாதார ஆசிரியரே நீங்கள் முன்னுதாரணமாக இருந்து 7500 ரூபா சம்பளத்தை பெற்று வாழ்ந்து காட்டலாமே? சிலவேளை இந்திய நாணயத்திக்கு பதிலாக இலங்கை என வாய் தடுமாறி விட்டதோ?
Reply : 0 0
dinesh Tuesday, 20 March 2012 02:59 PM
என்னக்கு நல்லா வருது வாயில...!! சொல்ல முடியல....
Reply : 0 0
ooraan Tuesday, 20 March 2012 03:00 PM
இவர் அரசாங்கத்தோடு இருப்பதனால் இவ்வாறு பேசுகிறார்... யதார்த்தத்தை புரிந்துகொள்ளாதவர் .. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ....
Reply : 0 0
abdul salam Tuesday, 20 March 2012 03:07 PM
புத்திசாலித்தனமான கல்வி மங்கி
Reply : 0 0
vallal Tuesday, 20 March 2012 03:16 PM
மனசாட்சிய தொட்டுச் சொல்லுக்கள்... உங்களது மாத செலவு எவ்வளவு.?
Reply : 0 0
Ihjas Tuesday, 20 March 2012 03:22 PM
உங்களுக்கு 7500/= தந்து 10 நாளைக்கு சிக்கனமாய் புத்திசாலிதனமாய் செலவழிக்க சொன்னால் எங்களின் நிலை உங்களுக்கு புரியும்...
Reply : 0 0
goodheart Tuesday, 20 March 2012 03:29 PM
அன்றைக்கு யுத்தம் என்ற பேரிலே வெளிநாட்டுக்கடன், உள்நாட்டு வரி, பொருட்களின் விலையேற்றம்!!!!!!!!!, இன்று யுத்தம் இல்லை அப்படியாயின் ஏன் இன்னும் இந்த அவல நிலை தொடர்கிறது????, இதற்கு உங்களின் சரியான பதிலைத் தாருங்கள் அப்புறம் நாங்கள் எங்கள் வாழ்க்கைச் செலவை பார்த்துக்கொள்கிறோம்
Reply : 0 0
maheswaran Thilipan Tuesday, 20 March 2012 02:28 PM
நான் புல்மோட்டையில டீச்சர், மனைவி பிள்ளைகள் கல்முனை இல். எனக்கு வீடு வாடகை 2500.00
சாப்பாடு 6500.00
போக்குவரத்துக்கு 1500.00 (பஸ்)
எனது செலவு 10000.00
டீச்சர் சம்பளம் மொத்தமாக 21000.00
மிகுதி சம்பளம் 11000.00
குடும்ப அங்கத்தவர்கள், மனைவி, பிள்ளைகள் (4 வயது, 7 வயது)
அமைச்சரே ப்ளீஸ் பஜெட் ஒன்னு செய்து தாங்களே ஏன்டா குடும்பத்திற்கு. ப்ளீஸ் பர்லிமன்ட் பஜெட் வேண்டாம்.
Reply : 0 0
leefan Tuesday, 20 March 2012 04:47 PM
ஆஹா ... அமச்சரினை வைத்து குடும்ப படம் தயாரிக்கலாம்... நன்றாக ஓடும்...
Reply : 0 0
riyas Tuesday, 20 March 2012 05:01 PM
அமைச்சருக்கு சம்பளம் குறைத்து கொடுத்து பாருங்கள்... என்ன நடப்பது என்று...
Reply : 0 0
sham Tuesday, 20 March 2012 05:28 PM
மதிப்பிற்குரிய அமைச்சரே, முதலில் நீங்கள் புத்திசாலி தனமாக உங்கள் குடும்பத்திற்கு ஒருவருக்கு 2500/- வீதம் செலவு செய்து காட்டி விட்டு அம்முறையை மக்களுக்கு தெரிவியுங்கள். நீங்கள் ஒரு கணக்காளர் என்று தெரியும். மதம் ஒரு 3 நபர் உள்ள குடும்பத்திற்கு உங்கள் Budget இதுவா...
நாளொன்றுக்கு ஒரு கிலோ அரிசி... உங்கள் அரசில் அரிசியின் விலை தெர்யுமா 110, பாண் ஒன்று 65...
மின்சாரம் தேவை இல்லை, மண்ணெண்ணெய் விளக்கும் அடுப்பும் நாளொன்றுக்கு அரை லீற்றர் தேவை 65. ஒருவருக்கு ஒரு முட்டை என்றால் மூவருக்கு இரண்டு வேளைக்கு ஆறு முட்டை.......
Reply : 0 0
sham Tuesday, 20 March 2012 05:33 PM
இதர செலவு சமையலுக்கு (தேங்காய், வெங்காயம்.உப்பு புலி, பருப்பு) 100
402
402*30 =12,060
சாதாரணமாக குடும்ப செலவு 3 பேருக்கு 12,060 தேவை. சும்மா வாய்க்கு வந்தது கணக்காகாது sir...
Reply : 0 0
meenavan Tuesday, 20 March 2012 05:40 PM
கரண்டு பில், தண்ணி பில் இன்னும் பல வாழ்கை சுமைகளை அரசாங்கம் அதிகரித்து விட்டு, வீர வசம் பேசும் கீழ் தரமான அரசியல் வேறு எந்த நாட்டிலும் இல்லை...
Reply : 0 0
riswan Tuesday, 20 March 2012 05:52 PM
நீங்கள் முதலில் ஆடம்பரமாக வாழ்வதை தவிர்த்து எளிமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் உங்களை பார்த்து நாடே திருந்தும் !!!!!!!!!
Reply : 0 0
riswan Tuesday, 20 March 2012 06:04 PM
மாணவர்களுக்கு மூன்றுவேளை உணவுக்கு 2500 ரூபா என்றால் இதில் மூன்று அங்கத்துவர் கொண்ட குடும்பத்துக்கும் 7500 போதுமா? கட்டிடத்துக்கான வாடகை, போக்குவரத்து செலவு, சுகாதார செலவு, திடீர் விபத்து செலவு, பிள்ளைகளின் கல்விச் செலவு, திடீர் விருந்தாளிகளின் விருந்தோம்பல் செலவு, விசேட பண்டிகை செலவு, உடைகள் மற்றும் அணிகலங்களுக்கான செலவு, என்று பட்டியலை நீட்டுகொண்டு செல்லலாம் இவைகள் எல்லாம் ஆடம்பர செலவுகள் இல்லை, மிக அத்தியாவசியமான செலவுகள்.
அமைச்சரே நீங்கள் 7500 ரூபாவுக்கு வாழ்ந்து காட்ட முடியுமா?.....
Reply : 0 0
அகரையூரான் Tuesday, 20 March 2012 06:33 PM
கஷ்டத்தில் இருக்கும் நாட்டு மக்கள் கவலை மறந்து சிரிக்க இப்படியான செய்திகள் இடைக்கிடை வெளிவர வேண்டும். நன்றி அமைச்சரே!
Reply : 0 0
pradeep Tuesday, 20 March 2012 07:00 PM
மூன்று பேரினைக் கொண்ட குடும்பமொன்று வாழ்வதற்கு மாதாந்தம் ரூபாய் 7500 வருமானம் போதுமானதென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஒரு நட்சத்திர விடுதி விருந்துபசாரத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கு ஒருவருக்கான உணவு 6500 ரூபாயாக இருந்தது. இதுபோன்ற அனாவசிய, ஆடம்பர செலவுகளை நாம் தவிர்ப்பது சிறந்தது.
உணவு விடுதிகளின் சாப்பிடுவதையும் அனாவசியமாக செலவு செய்வதிலேயுமே பலர் காலம் தள்ளுகின்றனர்.
மேற்கூறியவை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்த கருத்து, அவரோட செலவு ரொம்ப கம்மி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago