2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 8 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு, குட்டித்தீவு பிரதேச கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றதாகக் கூறப்படும் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 7  பேர் மட்டக்களப்பையும் ஒருவர் தென்பகுதியையும் சேர்ந்தவர் ஆவர்.

இவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு குட்டித்தீவு கடல் பகுதியில் சிறிய படகு ஒன்றில் ஏறியபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகவும் நீர்கொழும்புப் பொலிஸார் கூறினர்.

நீர்கொழும்புப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X