2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 93 பேருக்கு பிணை

Super User   / 2012 நவம்பர் 22 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு விமானம் மூலம் திருப்பி அனுப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 93 பேர் இன்று வியாழக்கிழமை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி. அமரசிங்கவினால் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களுடன் ஆஜர் செய்யப்பட்ட ஏனைய ஏழு பேரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சட்டவிரோத கடத்தலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த ஏழு பேரையே தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.

இந்த 100 பேரும் படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு கோரி புகலிடம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். பிணை வழங்கப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X