2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கொழும்பு இந்து மகா வித்தியாலய புனரமைப்பிற்கு 97 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்டு பூர்த்தியடையும் நிலையிலுள்ள மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயத்தின் கட்டிட நிறைவு பணிக்காக 97 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கல்வி நிதி ஒதுக்கீட்டுச் செயலாளர் எம்.பிருத்திவிராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

சுமார் மூன்று கோடி ரூபா செலவில் கட்டப்பட்டுள்ள மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயத்தின் கட்டிடம் முழுமையாக கட்டி முடிப்பதற்காக ரூபா 97 இலட்சம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் வேண்டுகோளுக்கிணங்க மேல்மாகாண கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் மூலம் பாடசாலை வசதி மிக்க நவீன முறையிலான வகுப்பறைகளை கொண்டுள்ளது.

கடந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் அதிகூடிய சித்தி பெற்றமையினால் பாடசாலையின் அதிபர் திருமதி. சிறிசோமா மற்றும் ஆசிரியர்களும் பாராட்டுக்குறியவர்களாவார்கள்.

அதேபோல் பாடசாலைகளின் கட்டிட வேலைகள் பூர்த்தியடைந்ததும் வகுப்பறைகளுக்கான புதிய தளபாடங்கள் பெற்று கொடுக்கப்படும். எதிர்காலத்தில் பாடசாலை கல்வித்துறையில் சிறந்து விளங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் சிபாரிசின் மூலம் மேல்மாகாண கல்வி அமைச்சினூடாக பெற்றுக் கொடுக்கப்படும். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .