Kogilavani / 2011 டிசெம்பர் 18 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே. என்.முனாஷா)
வீடுகள் பலவற்றில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடி நபரை நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 12 ஆயிரம் ரூபாய் பணமும், 10 டொலர்களையும் கைப்பற்றியுள்ளதாக நீர்கொழும்பு விஷேட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி நிசாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடிவர் என்றும் இதுவரை 10 வீடுகளில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நபரினால் திருடப்பட்ட நகைகளின் ஒரு பகுதியை பொலிஸார் பன்னல பிரதேசத்தில் உள்ள நகை கடையொன்றில் இருந்து உருக்கப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.
இதேவேளை, இந்நபரை கைது செய்யும்போது 46 கிராமும் 330 மில்லி கிராமும் கொண்ட நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
21 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago